தமிழ் மண் இழந்த உன்னத கவிஞர் புலமைப்பித்தன்

அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், தமிழ் சினிமாவின் இனிய பாடல்களை வழங்கியவருமான புலவர் புலமைப்பித்தன் காலமானார்.
தமிழ் மண் இழந்த உன்னத கவிஞர் புலமைப்பித்தன்
x
அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், தமிழ் சினிமாவின் இனிய பாடல்களை வழங்கியவருமான புலவர் புலமைப்பித்தன் காலமானார்.  

தமிழ் மண் கண்ட உன்னத கவிஞர்கள் ஏராளம்...

அதில் முன்வரிசையில் சிம்மாசனமிட்டிருப்பவர் புலவர் புலமைப்பித்தன்

ராமசாமியாக கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் வளர்ந்து வந்தவர், சூலூரில் நூற்பாலையில் பணிபுரிந்தவாறு தமிழ் புலவர் பயிற்சியை முடித்தார்.

தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த நாட்களிலேயே ராமசாமி, புலவர் புலமைப்பித்தனாக அறியப்பட்டார்.

1968ஆம் ஆண்டு குடியிருந்த கோயில் படத்தில் நான் யார் நீ யார் என்ற பாடல் மூலம் திரையுலகில் நுழைந்தவர், அன்று முதல் தனது பாடல்கள் மீது பித்து பிடிக்க வைத்தார்...

எம்.ஜி.ஆருடனான நெருக்கம், புலவரை பல பாடல்களை எழுத வைத்தது... எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய பல பாடல்கள் ஆல் டைம் கிளாசிக் ஹிட்ஸ்

கவிஞரையும், காதலையும் பிரித்துவிட முடியுமா... அவர் எழுதிய டூயட்கள் இப்போதைய இளசுகளையும் கவர்ந்திழுக்கும் அபூர்வங்கள்.. பிரிவோ, சோகமோ, அப்போது வரிகளால் உறவாடி ஆறுதல்படுத்துவார் புலமைப்பித்தன். அரசியலையும், பொதுவுடைமை கருத்துக்களையும் பாடல்கள் மூலம் மக்களிடத்தில் கொண்டு சேர்த்தவர் புலமைப்பித்தன். 

திரையுலகில் எம்.ஜி.ஆர் தொடங்கி, வடிவேலுவின் எலி திரைப்படம் வரை பல பாடல்களை கொடுத்துள்ளார் புலமைப்பித்தன். 

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றாலே பாடல் பட்டியல் நீளும் என்பதுதான் புலமைப்பித்தனின் கவி ஆளுமை.. 4 முறை சிறந்த பாடலாசிரியர் விருது, பெரியார் விருது உள்ளிட்டவை புலமைப்பித்தனின் அழியா சொத்துக்கள்...

சட்டமன்றத்தின் துணைத்தலைவர், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது அரசவை கவிஞர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் அவைத்தலைவர் என அரசியலிலும் தொடர்ந்து பயணித்தார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக, தொடர் சிகிச்சையில் இருந்த புலமைப்பித்தன் காலமானார். மறைவு இயற்கை என்றாலும், தனது படைப்புகளால் என்று உயிர்த்திருப்பார் புலமைப்பித்தன்.


Next Story

மேலும் செய்திகள்