ஊட்டி மலை ரயிலுக்கான புதிய எஞ்சினின் சோதனை ஓட்டம்- மேட்டுப்பாளையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது

திருச்சியில் தயாரிக்கப்பட்ட ஊட்டி மலை ரயிலுக்கான புதிய நிலக்கரி நீராவி எஞ்சினின் சோதனை ஓட்டம், மேட்டுப்பாளையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
x
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் 112 ஆண்டுகால பாரம்பரிய மலை ரயில் இயக்கப்படுகிறது.

நிலக்கரி மூலம் இயங்கும் இந்த ரயிலின் நீராவி எஞ்சின் பழுதடைந்ததை அடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிய எஞ்சின் தயாரிக்கப்பட்டது. 

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை கொண்ட இந்த ரயில் எஞ்சினின் மதிப்பு, 8 கோடியே 89 லட்ச ரூபாய். 

இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த ரயில் எஞ்சின், பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. 

இறுதியாக, செவ்வாய் கிழமை காலை அதிகாரிகள் முன்னிலையில், ரயில் எஞ்சினில் 2 பெட்டிகள் பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு ரயில் நிலையம் வரையும், அங்கிருந்து பல் சக்கரம் பொருத்தப்பட்ட ரயில் பாதையில், அடர்லி மற்றும் ஹில் குரேவ் ரயில் நிலையம் வரையும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 

மணிக்கு 10 முதல் 11 கி.மீ., வேகத்தில் செல்லும் எஞ்சின் என்பதால், சுற்றுலா பயணிகள் ஊட்டியின் எழில்மிகு காட்சிகளை ரயிலில் செல்லும்போது நிதானமாக கண்டு களிக்க முடியும்.

100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த உதகை மலை ரயிலுக்கு, இந்த புதிய எஞ்சின் புத்துயிர் ஊட்டியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்