கொடநாடு விவகாரம் - காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பதிவு : செப்டம்பர் 07, 2021, 06:50 PM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்றும்  தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாகவும், மேல்விசாரணை நடத்திக் கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல் தான் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்றும், கொடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது என கூறினர். 

இந்த வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என கூறி அனுபவ் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

57 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - பகீர் தகவல்கள்

ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாச்சலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் பணியின்போது , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

10 views

கல்லூரி மாணவி கொலையான சம்பவம் - கொலையாளிக்கு 15 நாட்கள் சிறை

சென்னையில் கல்லூரி மாணவி ஸ்வேதாவை கொலை செய்த ராமச்சந்திரனை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

12 views

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கு - காவல் ஆய்வாளர் வசந்தி ஜாமின் கோரி மனு

கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

8 views

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : விபத்தில்லா தீபாவளி - அரசு உறுதி

தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

12 views

மேகதாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

9 views

பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.