அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் 2 ஆயிரத்து 22 ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தமிழகத்தில் 2 ஆயிரத்து 22 ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும் என்றார். அரசு பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்த அவர், கணக்கு, கருவூலத்துறையின் பணிகளை எளிதாக்க மாவட்டத்தோறும் பயிற்சி வழங்கப்படும் எனக் கூறினார். மேலும், புதிய அரசு பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க நவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்