"இணையத்தில் வக்பு வாரிய சொத்து விவரம்"

தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 500 வக்பு வாரிய சொத்துக்களின் விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வக்பு வாரிய சொத்து விவரம்
x
சட்டப்பேரவையில் பேசிய உறுப்பினர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் உரிமை, ஆவண விவரங்களை இணைய தளத்தில் தமிழில் வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.  இதற்கு பதிலளித்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான், உறுப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப வக்பு வாரிய இணையதளத்தில் தகவல்கள் தமிழில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 500 வக்பு வாரிய சொத்துக்களின் விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என உறுதி அளித்த அமைச்சர், வக்பு வாரியத்தில் ஏற்கனவே நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். அரசு பொறுப்பேற்ற நாள் முதல், சென்னை நந்தனத்தில் 7 கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 800 சதுர அடி வக்பு வாரிய நிலம், திருச்சியில் 12 கோடி மதிப்பிலான 14 ஆயிரத்து 750 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கு இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்