தமிழக-ஆந்திரா எல்லையில் கனமழை - நிரம்பிய ஜவ்வாது ராம சமுத்திரம் ஏரி : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தமிழக ஆந்திரா எல்லையில், கனமழை காரணமாக, நாராயணபுரம் பகுதியில் உள்ள ஜவ்வாது ராம சமுத்திரம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது.
தமிழக-ஆந்திரா எல்லையில் கனமழை - நிரம்பிய ஜவ்வாது ராம சமுத்திரம் ஏரி : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தமிழக ஆந்திரா எல்லையில், கனமழை காரணமாக, நாராயணபுரம்  பகுதியில் உள்ள ஜவ்வாது ராம சமுத்திரம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது. ஏரி நிரம்பியதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதிகளைப் பெற உள்ளன. பொதுமக்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தி அடையும் என்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஏரியில் உபரி நீர் செல்ல வழியில்லாத காரணத்தால், வெள்ள நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து, பயிர்கள் முழ்கி விடுகின்றன. எனவே தடுப்புகள் அமைத்து உபரி நீர் நேரடியாக பாலாற்றிற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்