வரதரட்சணை கொடுமை வழக்கு; குற்றம் நிரூபிக்கப்படாததால் தண்டனை ரத்து - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால், கணவனுக்கு வழங்கிய ஒரு வருட சிறைத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உள்ளது.
வரதரட்சணை கொடுமை வழக்கு; குற்றம் நிரூபிக்கப்படாததால் தண்டனை ரத்து - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
வரதட்சணை கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால், கணவனுக்கு வழங்கிய ஒரு வருட சிறைத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உள்ளது. நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த கவுது காஜா என்பவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, தந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த பிரிசில்லா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து உள்ளார். இதனிடையே கணவர் காஜா, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, பிரிசில்லா புகார் அளித்தார். இதன்படி, நடந்த விசாரணையில் காஜாவுக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து காஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்படாததால் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்