அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- 73 கன அடியை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்வரத்து 11 ஆயிரத்து 392 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- 73 கன அடியை எட்டியது மேட்டூர் அணை
x
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. நேற்று ஏழாயிரத்து 491 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 11 ஆயிரத்து 392 கன அடியாக உயர்ந்துள்ளது.  இதனால், அணையின் நீர்மட்டம் 73 கன அடியாகவும், நீர் இருப்பு 36 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும், அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்