கருணாநிதி நினைவு தினம் - முதல்வர் மரியாதை.. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

கருணாநிதி நினைவு தினம் - முதல்வர் மரியாதை.. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
x
கருணாநிதி நினைவு தினம் - முதல்வர் மரியாதை.. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திமுக எம்.பி.கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் ராஜாத்தியம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்