தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
x
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக ஆகஸ்ட் 6 முதல் 19ஆம் தேதி வரை துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பித்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் இதற்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்ப எண் அல்லது நிரந்த பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை  பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்தள்ளது.


Next Story

மேலும் செய்திகள்