கொரோனா நிவாரணம் பெற மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
x
ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

99 சதவீதத்திற்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் இவற்றை பெற்றுள்ள நிலையில்,

இதுவரை பெறாதோர் 31ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு பெற்றுக் கொள்ள இயலாதவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் அனுமதி பெற்று ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகும் பொருட்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்