"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அத்திக்கடவு - அவினாசி திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டபணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  அப்போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்தும், தூர்வாரியும் நீரின் கொள்ளளவை அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார். மேலும் மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் , அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை  அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்