மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு உன்னத நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டம் நாளடைவில், மக்களிடையே பேராசையை தூண்டியதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியதோடு தனியார் லாட்டரி ஏஜெண்டுகள் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கள்ள நோட்டு அடிப்பது போல அடித்து மக்களிடம் விற்பனை செய்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் தான் கடந்த 2003ஆம் ஆண்டு  லாட்டரி சீட்டு தொடர்பாக தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தது என்றும், ஒரே கையெழுத்தில், லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையே சேரும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்த திமுக, தற்போது லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் லாட்டரி சீட்டை, மீண்டும் தமிழக அரசு கொண்டு வந்தால், தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை அரசு சந்திக்க நேரும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்