கிசான் திட்டத்தில் ரூ.2,992 கோடி முறைகேடு..!

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் உள்ள தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து 340 கோடி ரூபாய் மீட்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிசான் திட்டத்தில் ரூ.2,992 கோடி முறைகேடு..!
x
பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் உள்ள தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து 340 கோடி ரூபாய் மீட்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ஆறாயிரம் ரூபாயை 3 தவணையாக கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற்ற 42 லட்சத்து 16 ஆயிரம் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து இரண்டாயிரத்து 992 கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாக 
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இதில் அதிகபட்சமாக அசாமில் 8 லட்சம் தகுதியற்ற விவசாயிகளும், தமிழகத்தில் 7 லட்சம் தகுதியற்ற விவசாயிகளும், பஞ்சாப்பில் ஐந்து லட்சத்து 62 ஆயிரம் தகுதியற்ற விவசாயிகளும் 

மகாராஷ்டிராவில் நான்கு லட்சத்து 45 ஆயிரம் தகுதியற்ற விவசாயிகளும், உத்தரபிரதேசத்தில் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் தகுதியற்ற விவசாயிகளும், குஜராத்தில் இரண்டு லட்சத்து 36 ஆயிரம் தகுதியற்ற விவசாயிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. 

அதன் படி, அசாம் மாநிலத்தில் இருந்து 554 கோடி ரூபாயும், பஞ்சாப்பில் இருந்து 437 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவில் 358 கோடி ரூபாயும், 

தமிழகத்தில் 340 கோடி ரூபாயும், உத்தர பிரதேசத்தில் 258 கோடி ரூபாயும், குஜராத்தில் 220 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்