சார்பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் பணியிட மாற்றம் - அமைச்சர் உத்தரவையடுத்து நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சார்பதிவாளர் மற்றும் தற்காலிக இணை சார்பதிவாளர் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
x
அவிநாசியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வாரம் அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல், தாமதமாக வந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து சார்பதிவாளர் ரகோத்தமன் மற்றும் தற்காலிக இணை சார்பதிவாளர் உதயசங்கர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்