"கோவை, நீலகிரியில் 23ம்தேதி வரை மழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை நீலகிரி, கோவை மற்றும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை பொறுத்தவரை இன்று முதல் 23 ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், இதை போல், இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை தமிழக கடலோரம் மற்றும் வளைகுடா பகுதிகளுக்கு  எச்சரிக்கையுடன் செல்லுமாறும் இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை தென் கிழக்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்