மேகதாதுவில் அணை - விவசாயிகள், சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

மேகதாது அணை கட்டுவதற்கு சாத்தியக்கூறு இல்லை என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ள நிலையில், விவசாயிகள், சட்ட வல்லுநர்கள் கருத்து என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்..
x
மேகதாதுவில் அணை - கர்நாடகா முயற்சி
கர்நாடக முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு
நீதிமன்ற அவமதிப்பு என கண்டனம்
அரசு கவனமாக கையாள கோரிக்கை
விவசாயிகள், சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

மேகதாது அணை கட்டுவதற்கு சாத்தியக்கூறு இல்லை என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ள நிலையில், விவசாயிகள், சட்ட வல்லுநர்கள் கருத்து என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்..

மேகதாது அணையை உறுதியாக கட்டுவோம் என பிடிவாதமாக இருந்து வருகிறது கர்நாடக அரசு..

இதனை எதிர்த்து அனைத்து சட்டமன்ற கட்சிக்குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து எதிர்ப்பை பதிவு செய்தது

இந்த சந்திப்பில் மேகதாது அணை கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவு தவறானது என்பது மத்திய அமைச்சர் கூறியிருப்பதன் மூலம் உறுதியாவதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்


நதிநீர் இணைப்பு, நீர் பற்றாக்குறையை போக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதால், எதிர்காலத்தில் தமிழகம் - கர்நாடகாவிற்கு இடையே நிரந்தர தீர்வு எட்டப்படும் என உறுதிப்பட கூறுகிறார் பாஜக நிர்வாகி நாகராஜ் 

Next Story

மேலும் செய்திகள்