நீர்நிலைகளை நேரில் அளவிட வேண்டும் - உயர் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை நேரில் சென்று துல்லியமாக அளவிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளை நேரில் அளவிட வேண்டும் - உயர் நீதிமன்றம்
x
தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை நேரில் சென்று துல்லியமாக அளவிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு அருகே உள்ள பெரும்பள்ள ஓடையின் இருபுறமும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கான்கிரீட் சுவர் எழுப்ப தடை கோரி, ஓடை பாதுகாப்பு குழு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரிக்கப்பட்டது. 

அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், செயற்கைகோள் எடுத்த படங்களை இணையத்தில் ஏற்றி உள்ளதாக கூறியது. 

பெரும்பள்ள ஓடை கட்டுமானத்துக்கு, பலர் ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும், இது மழைநீர் வடிகால் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. 

இதை மறுத்த பெரும்பள்ள ஓடை பாதுகாப்புக் குழு, நீர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாக புகார் கூறினர். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை ட்ரோன், ஜி.பி.எஸ் தாண்டி, நேரில் சென்று, துல்லியமாக அளந்து பாதுகாக்க வேண்டும் என்றனர். 

மேலும், அழகுபடுத்தும் பெயரில் இயற்கை நீரோட்டத்துக்கு இடையூறாக கட்டுமானம் எதையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள்,

ஈரோடு பெரும்பள்ள ஓடையில் கட்டுமானப் பணிகள் குறித்து  வரும் செவ்வாய் கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்