"சொத்து விவரங்கள் ஒத்துபோகவில்லை" - முன்னாள் அமைச்சர் வீரமணி மீது நடவடிக்கை : 2 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 12, 2021, 03:18 PM
வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில்  ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியடைந்தார். இந்நிலையில், தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி.வீரமணிக்கு எதிராக குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது வேட்புமனுவில் தவறான பான் நம்பரை குறிப்பிட்டிருந்ததாகவும், அவரது சொத்து விவரங்கள், வருமானவரி கணக்குடன் ஒத்துப்போகவில்லை எனவும் தெரிவித்தார். எனவே முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்

சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

377 views

சிந்துவின் 2-வது ஒலிம்பிக் பதக்கம் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாதனை படைத்து உள்ளார்.

110 views

பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

65 views

"மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாஜகவினர் அனுமதிக்க மாட்டோம்"- பொன் ராதாகிருஷ்ணன்

மேகதாதுவில் கர்நாடகாவால் நிச்சயம் அணை கட்ட முடியாது என்றும், அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

12 views

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

50 views

"மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு" மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் முடிவு - மா.சுப்பிரமணியன் பேட்டி

"மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு" மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் முடிவு - மா.சுப்பிரமணியன் பேட்டி

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.