"8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி, கோவை, தேனி, வேலூர்...மற்றும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும்,சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும்,இதனால் பொதுமக்கள் மலைஏற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வரும் 12ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்