முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் பயணம் - நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
x
திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக  திருவாரூர் மாவட்டத்திற்கு  சென்றுள்ளார். சென்னையில் இருந்து  விமானம் மூலம்  திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தாய்-சேய் நல விடுதி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் திருக்குவளைக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி திமுகவினர் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்