ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
x
ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், ஒன்றியம் என்ற வார்த்தையை கேட்டு யாரும் மிரள தேவையில்லை என்றும் ஒன்றிய அரசு என சொல்வதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். கூட்டாட்சி தத்துவம் அடங்கிய வார்த்தை என்பதால் ஒன்றிய அரசு என அழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்