புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள்...கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

கல்வி தொலைக்காட்சியில், புதியகல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x
புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள்...கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு 

கல்வி தொலைக்காட்சியில், புதியகல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கல்வி தொலைக்காட்சியுடன்12 தனியார் தொலைக்காட்சிகளிலும் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. மேலும், கல்வி தொலைக்காட்சியின் யூ-டியூப் தளத்திலும் பதிவேற்றப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்