விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க மாநில பணிக்குழு

வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க மாநில அளவிலான பணிக்குழு ஒன்றை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க மாநில பணிக்குழு
x
விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க மாநில பணிக்குழு 

வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க மாநில அளவிலான பணிக்குழு ஒன்றை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவிட் 19 தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுக்களை தடுக்க மாநில அளவிலான பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த குழுவிற்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமை ஏற்பார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில் வன உயிரின காப்பாளரும் ஓய்வு பெற்றசிறப்பு செயலாளர் ஆர்.சுந்தராராஜூ, எஸ்.தியோடர் பாஸ்கரன் உள்ளிட்ட 6 பேர் இடம் பெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பணிக்குழு நோயின் பரவலை கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் அதற்கு தொடர்பு​டைய  துறை பணிகளை உன்னிப்பாக கண்காணித்து தொடர் அறிக்கைகளை சமர்பிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு விடுத்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்