"தலைவராக தமிழர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி" - ஸ்டாலின்

அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது பெருமைக்குரியது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைவராக தமிழர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி - ஸ்டாலின்
x
"தலைவராக தமிழர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி" - ஸ்டாலின்

அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது பெருமைக்குரியது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான, இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால், உலகளாவிய பெருமையை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திருவாரூரில் பிறந்து சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து கிண்டி பொறியியல் கல்லூரியில் மேல்படிப்பை தொடர்ந்தார் என தெரிவித்த ஸ்டாலின்,தொழில்நுட்பம், ஆராய்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ராஜகோபால் கூறியிருப்பது பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள பற்றுதலின் வெளிப்பாடு என புகழாரம் சூட்டினார்.தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்குச் சான்றாக விளங்கும் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்