கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணி மும்முரம்... 6 கட்ட ஆய்வில் 2500 பொருட்கள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய மண்பானை, முது மக்கள் தாழிகள், மண்டை ஓடுகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
x
சிவகங்கை மாவட்டம், கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய மண்பானை, முது மக்கள் தாழிகள், மண்டை ஓடுகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழடியில் 6 கட்ட அகழாய்வு பணிகள் மத்திய மாநில அரசு சார்பாக கீழடி,கொந்தகை, அகரம், ‌மணலூர் நடத்தப்பட்டு முடிவடைந்தது. இதில் 2 ஆயிரத்து 500- க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் ஏழாம் கட்ட  அகழ்வாராய்ச்சியில், கொந்தகை‌ மணலூர், அகரம் ‌ உள்ளிட்ட 4, இடங்களில் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று  வருகிறது. இந்த ஆய்வில், சுடுமண் காதணி ஆபரணம், தக்களி, பகடைக்காய்கள், சொப்பு பாத்திரம், இரும்பாலான கத்தி, ஆணிகள், சிறப்பு வாய்ந்த பானை ஓடுகள், சுடுமண் முத்திரைகள், சூதுவளை மணிகள், சில்லுவட்டுகள், சுடுமண் சக்கரம், எடை கற்கள், ஆட்டகாய்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு பணிகள், பல அதிசயங்களையும், அற்புதங்களையும் தரும் என சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

 

Next Story

மேலும் செய்திகள்