பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
x
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஸ்டாலின், டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார். கூடுதல் கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, ஏழு பேர் விடுதலை, ஜிஎஸ்டி பாக்கி தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்