ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் வங்கிகளிடையே இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டண விகிதங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவில் உயர்த்தியுள்ளது.
x
வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்கவும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்களில் இருந்து மூன்று முறை கட்டணமில்லமால பணம் எடுக்கவும் அனுமதி தொடர்கிறது. ஊரகப் பகுதிகளில், இதர வங்கிகளின் ஏ.டி.எம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்க அனுமதி தொடர்கிறது. இந்த ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கும் மேலே பணம் எடுத்தால், அவற்றிற்கு இதுவரை அதிகபட்சமாக விதிக்கப்பட்ட 20 ரூபாய் கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இந்த 21 ருபாய் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு, இத்துடன் சேர்க்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.



* 21 ரூபாய் கட்டணம் என்பது அதிகபட்ச வரம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் இந்த வரம்பிற்கும் கீழே, தங்கள் விருப்பபடி கட்டணங்களை விதிக்க அனுமதிக்கபடுகிறது. உதாரணமாக எஸ்.பி.ஐ வங்கி தற்போது ஜி.எஸ்.டி வரி தவிர்த்து பரிவர்த்தனை ஒன்றுக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர், வேறு ஒரு வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால், அதற்கு வாடிக்கையாளரின் வங்கி, மற்றொரு வங்கிக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து ஆகஸ்ட் ஒன்று முதல் 17 ரூபாயாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது


* பணப் பரிமாற்றம் அல்லாத இதர பரிமாற்றங்களுக்கு, வங்கிகளிடையே வசூலிக்கப்படும் கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக, ஆகஸ்ட் ஒன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் கடைசியாக 2014 ஆகஸ்டிலும், வங்கிகளுக்கிடையே விதிக்கப்படும் கட்டணங்கள் 2012 ஆகஸ்டிலும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்