கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மறுவாழ்வுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்த குழு அமைப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மறுவாழ்வுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்த குழு அமைப்பு
x
கொரோனாவால் பெற்றோர், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டங்களை செயல்படுத்த வழிகாட்டுதல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. நிதித்துறைச் செயலாளர் தலைவராகவும், சமூக நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 2 பேர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு தேவைப்படும் போது அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அவ்வப்போது கூடிய ஆலோசனை நடத்தும் என தமிழக அரசு  தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவல் 39 குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில், ஆயிரத்து 120 குழந்தைகள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்