முதுமலை யானைகள் முகாமில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

வண்டலூர் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து முதுமலை யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
x
இந்தியாவில் மனிதர்களை தாக்கி வந்த கொரோனா, தற்போது விலங்குகளையும் பதம் பார்க்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் பணியில் கால்நடை மருத்துவத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதில் ஒரு பகுதியாக, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயரண்யம் என இரண்டு முகாம்களில் 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. யானையின் தும்பிக்கை, மலம் கழிக்கும் பகுதி ஆகியவற்றில் இருந்து நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. ஒவ்வொரு யானைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், நான்கு நாட்களுக்குள் சோதனை முடிவு தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்