"தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
x
இன்று மற்றும் நாளை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வருகின்ற 5ம் தேதி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று முதல் ஜூன் 7ம் தேதி வரை புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் வருகின்ற 6ம் தேதி வரை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்