மேனிலை தேர்வு கிடையாது என்பது மத்திய அரசின் ஒரு சூழ்ச்சித் திட்டம் - வைகோ

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது மத்திய அரசின் சூழ்ச்சி என்பதால், மாநில அரசு தேர்வை நடத்த வேண்டும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மேனிலை தேர்வு கிடையாது என்பது மத்திய அரசின் ஒரு சூழ்ச்சித் திட்டம் - வைகோ
x
மேனிலைத் தேர்வு கிடையாது என்பது மத்திய அரசின் சூழ்ச்சி என்பதால், மாநில அரசு தேர்வை நடத்த வேண்டும் என்று, மதிமுக பொதுச்செயலாளர்
வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வு இல்லை என, பிரதமர் நேற்று அறிவித்து இருப்பதாக கூறியுள்ளார்.
 மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை என்றும்,
இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுகின்ற  மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? என அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே என்று  வைகோ, கூறியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித்  தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது,
தேசிய தேர்வு முகமை நடத்தும்
திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான், சேர்க்கை என்று கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே மேனிலைப்பள்ளித் தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் என வைகோ தெரிவித்துள்ளார்.  
எனவே மாநில அரசு இந்த சூழ்ச்சியில் சிக்காமல், கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் கலந்து ஆலோசித்து, மேனிலை பள்ளித்தேர்வை நடத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்