"அனைத்து ஊடகவியலாளர்களுக்கு ஊக்கதொகை" - நாம் தமிழர் கட்சியின், சீமான் வலியுறுத்தல்

ஊடகத்துறையில் உள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவித்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அனைத்து ஊடகவியலாளர்களுக்கு ஊக்கதொகை - நாம் தமிழர் கட்சியின், சீமான் வலியுறுத்தல்
x
"அனைத்து ஊடகவியலாளர்களுக்கு ஊக்கதொகை" - நாம் தமிழர் கட்சியின், சீமான் வலியுறுத்தல் 

ஊடகத்துறையில் உள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவித்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று மாத ஊக்கத்தொகை ரூபாய் ஐயாயிரம் வழங்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் பத்து இலட்சம் ரூபாய் நிதி என, அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்கும் வகையில் விரிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்