காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் நிறுத்தம்

ஊரடங்கினால் காவிரி -குண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் நிறுத்தம்
x
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக 2020 ஆம் ஆண்டு 7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து 4.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.171.1 கோடி திட்ட மதிப்பீட்டில் டெண்டர்கள் விடப்பட்டு, நான்கு மாதங்கள் முன்பு பணிகள் தொடங்கின. பணியில் 10-க்கு மேற்பட்ட ராட்சச இயந்திரங்கள், 20-க்கு மேற்பட்ட லாரிகள்,  50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியதால், காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தொடங்க உள்ள நிலையில், இந்த பணி மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கடலில் கலப்பதற்கு முன்னர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்