வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம்... ஆர்வமுடன் வாங்கிச்சென்ற பொதுமக்கள்

பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு தேவையான காய்கறிகளை நகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் கொண்டு சென்றனர்,
வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம்... ஆர்வமுடன் வாங்கிச்சென்ற பொதுமக்கள்
x
வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம்... ஆர்வமுடன் வாங்கிச்சென்ற பொதுமக்கள்

பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு தேவையான காய்கறிகளை நகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம்  கொண்டு சென்றனர்,. 60 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட காய்கறிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்,. நகர் பகுதிக்கு மட்டுமல்லாமல் அனைத்து கிராமங்களுக்கும் காய்கறிகள் அனுப்பப்பட்டுள்ளதாக பழனி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

துவங்கப்படாத நடமாடும் காய்கறி விற்பனை - பொதுமக்கள் காத்திருந்து ஏமாற்றம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய நகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்,. மொத்தம் உள்ள 18 வார்டுகளிலும்  14  வாகனங்கள் மூலம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது,. இந்த நிலையில் காலை 9 மணி ஆகியும் காய்கறி விற்பனை துவங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்


நடமாடும் காய்கறி விற்பனை துவக்கம் - வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகம்

கரூர் மாவட்டம்  புகழூர் பேரூராட்சி முழுவதும் நடமாடும் காய் கனி வாகனங்கள் மூலம்  காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது,. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்,. அதேபோல் பேரூராட்சி சாப்பில் வீடு வீடாக சென்று கபசுப குடிநீர் வழங்கும் பணியும் துவங்கப்பட்டது,. பேரூராட்சி மூலம் வழங்கப்பட்ட கபசுர குடிநீரை மக்கள் சமூக இடைவெளியுடன் நின்று வாங்கி பருகினர்


தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறி விற்பனை  - 4 கிலோ காய்கறிகள் அடங்கிய ஒரு பை ரூ.120

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிமக்களுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை பகுதியில் இருந்து 4 கிலோ காய்கறிகள் அடங்கிய ஒரு பை 120 ரூபாய் என வீதி வீதியாக விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. முதல் கட்டமாக, திருத்துறைப்பூண்டியில் நகர் பகுதிக்கு 4 வாகனங்களும், ஒன்றிய பகுதிகளில் 6 வாகனங்களும் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப வாகனங்கள் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை - வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏற்பாடு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வீடு வீடாக சென்று காய்கறிகளை விற்பனை செய்ய 15 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உழவர் சந்தையில் இருந்து காய்கறி வகைகளை நேரடியாக வீடுகளுக்கு சென்று விறபனை செய்வதற்காக, வேளாண்மைதுறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 15 வாகனங்கள் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு அனுப்பபடுகின்றன. மேலும், வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு, அதில் விற்பனையாளர் பெயர் மற்றும் விற்பனை செய்யும் பகுதிகள் உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்