மாற்று இடங்களில் தடுப்பூசி மையங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாற்று இடங்களில் தடுப்பூசி மையங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை மாற்று இடத்தில் அமைக்குமாறு, தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது, 
 
தமிழகத்திற்கு நாள்தோறும் 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவையுள்ள நிலையில், 7 ஆயிரம் குப்பிகளை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழகத்துக்கு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்ட நிலையில், தற்போது, 519 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
 
மேலும், டி.ஆர்.டி.ஓ. மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியை ஏற்படுத்த பி.எம்.கேர் நிதியத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து, உடனடியாக பி.எம்.கேர் நிதியத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசை அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பூசி போட வருபவர்களின் அச்சத்தை போக்குவதோடு, மருத்துவமனைகளில் கூட்டத்தை குறைக்க, தடுப்பூசி மையங்களை மாற்று இடங்களில் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்