கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தமிழகத்தில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 13 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லை என்பதால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை குறுகிய காலத்திற்கு இறக்குமதி செய்து, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்ட போதிலும், கூடுதல் ஆக்சிஜன் தேவை இருப்பதால், போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநில எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து ஆக்சிஜனை ரயில் மூலம் கொண்டு வந்து, அவற்றை சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்றும், ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்