ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா உறுதி - மொத்த பாதிப்பு 10,81,988 ஆக உயர்வு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
x
தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 449 ஆக இருந்த நிலைெயில், தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு 10 லட்சத்து 81 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 557 ஆக உயர்ந்துள்ளது. பிறந்து 19 நாட்களே ஆன பெண் குழந்தையும், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு  ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 180 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நாளில் 11 ஆயிரத்து 65 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் 15 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்