தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு - கடத்தல் தொழில் அமோகம்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதையே காரணமாக வைத்து கடத்தல் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு - கடத்தல் தொழில் அமோகம்
x
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதையே காரணமாக வைத்து கடத்தல் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ரமேஷ் ,சந்தியா, யோகன்சன் , ராஜ், பிரேம் ஆகியோர் ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், மருத்துவ பொருட்கள், அழகு சாதன பொருட்களை கடந்த 20ஆம் தேதி இலங்கைக்கு கடத்திச் சென்றனர். இலங்கையின் மன்னார் மாவட்டம் கல்பட்டி பகுதியில் இவர்களை மடக்கி பிடித்த இலங்கை கடற்படை பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து ஐந்து பேரையும் தங்கள் பாணியில் கவனித்து அனுப்பியுள்ளனர். தமிழகம் திரும்பிய படகை சோதனையிட்ட போது படகில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால்  தமிழர்களை சிறையில் அடைக்க தயங்கும் இலங்கை கடற்படை , அடித்து மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி விடுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கடத்தல் காரர்கள் தொழிலை துணிச்சலாக செய்து வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்