பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் - இரும்பு கம்பியால் அடித்து ஒருவர் கொலை
பதிவு : ஏப்ரல் 21, 2021, 06:18 AM
மதுபோதையில் நண்பன் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். 42 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் குடிபோதைக்கு அடிமையான ராஜ்குமார் வேலைக்கு போகாமல் தன் நண்பர்களுடன் குடித்து பொழுதை கழித்து வந்துள்ளார். தனது நண்பர்களை வீட்டுக்கே வரவழைத்து மது அருந்துவதால் இவரின் தாய் பக்கத்து தெருவில் உள்ள மகளின் வீட்டில் தங்கி உள்ளார். 
சம்பவத்தன்று தன் அண்ணன் நீண்ட நேரம் கதவை திறக்காததை அறிந்த தங்கை, வீட்டுக்கு வந்து பார்த்த போது தலையில் பலத்த ரத்த காயங்களுடன் ராஜ்குமார் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது ராஜ்குமாருடன் கடைசியாக பேசியவர் அசாருதீன் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது தான் உயிரிழந்த ரா​ஜ்குமாரின் நண்பர் தான் அசாருதீன் என தெரியவந்தது. சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது அசாருதீனுக்கு ராஜ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதனால் கோபமடைந்த அவர் இரும்பு கம்பியை எடுத்து அவரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அசாருதீனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6400 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1016 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

165 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

41 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

32 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

28 views

பிற செய்திகள்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல்... வான்வெளி தாக்குதல் - 20பேர் உயிரிழப்பு

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

34 views

கிடப்பில் உள்ள செம்மொழி தமிழ் விருதுகள்.. ரவிக்குமார் எம்.பி. கடிதம் மூலம் வலியுறுத்தல்

செம்மொழி தமிழ் விருதுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், எம்.பி. ரவிக்குமார் வேண்டுகோள்

14 views

திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்.. 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

101 views

திருச்சியில் நகைக்கடை ஊழியர் படுகொலை.. திட்டம் போட்டு கொலை செய்த கும்பல்

திருச்சியில் நகை, பணத்துக்காக நகைக்கடை ஊழியரை திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

243 views

உயர் அதிகாரிகளுக்கு கவனம் தேவை - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்போது மாவட்ட ஆட்சி தலைவர்கள் போன்ற உயர் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

29 views

பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.