தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா - ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக வரும் 27ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த ஜேஇஇ முதன்மை தேர்வை ஒத்திவைத்து, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
x
ஐ.ஐ.டி, எம்.ஐ.டி உள்ளிட்ட கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகின்றன. ஒரே மாணவர் நான்கு முறை தகுதி தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில்  முதல்கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் ஆபிரகாம் உள்ளிட்ட 13 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்நிலையில் அடுத்தகட்டமாக வரும் 27, 28 மற்றும் 30ம் தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை ஒத்தி வைப்பதாக, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, 15 நாட்களுக்கு முன்னதாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்