விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பெண்கள் உள்பட 4 பேர் காயம்
பதிவு : ஏப்ரல் 16, 2021, 11:51 AM
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, விருதுநகர் அடுத்த சதானந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் வெடிபொருள் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 30க்கு மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று மாலை வழக்கம் போல், வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணி நடந்துள்ளது. அதை பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட உராய்வில் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், 35 வயது ஆதிலட்சுமி, முத்துமாரி, செந்தி அம்மாள் ஆகிய 3 பெண்கள் மற்றும் சுந்தரபாண்டி ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே, மேல்சிகிச்சைக்காக, செந்தி அம்மாள், முத்துமாரி சுந்தரபாண்டி ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6405 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1024 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

171 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

46 views

பிற செய்திகள்

எனது புத்தகங்களை வாங்க வேண்டாம்; பள்ளி கல்வித்துறைக்கு இறையன்பு கடிதம்

தான் பதவியில் இருக்கும் வரை, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறையை தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

41 views

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளைத் தாக்கும் பூஞ்சை; நோயாளிகளுக்கு அடுத்தகட்ட ஆபத்துஎதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் பிரச்சினை.

43 views

ஆக்சிஜன் அளவு 96 %-க்கு அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் சேர வேண்டாம் - சுகாதாரத்துறை அரசாணை

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் போது கொரோனா நோயாளிகளை மருத்துமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

29 views

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

16-வது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

33 views

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.

90 views

முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி ஏற்றார் ; புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.