சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலம்; நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை, சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த, மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடைகோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலம்; நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை
x
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை, சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த, மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடைகோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் எல்லையை 3 கிலோமீட்டர் வரை நிர்ணயித்து அரசாணையும் வெளியிட்டது. இதை எதிர்த்து கன்னியாகுமரி திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின் உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சுற்றுச் சூழலை பாதுகாத்திடும் வகையில், நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நீண்ட ஆலோசனை மற்றும் விவாதத்திற்கு பிறகு, விதிகளை பின்பற்றி சூழலியலை பாதுகாத்திடும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்