அரியர் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு - சென்னை உயர்நீதிமன்றம்

அரியர் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
x
கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, வழக்கு விசாரணையில் அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம், பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு ஆட்சேபம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுமுன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், அரியர் மாணவர்கள் அனைவருக்கும் மே 17-ம் தேதி முதல் தேர்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்கான தேதிகள் அந்தந்த பல்கலைகழகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் அரசு கூறியது. ஆன்லைன் மூலம் தேர்வு எழுதாதவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மாட்டோம் என்றும் அரசு கூறிய நிலையில்..., அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அரியர் தேர்வுகளை 8 வாரங்களுக்குள் நடத்த உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்