பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள்..!

நெல்லையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள்..!
x
நெல்லையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மாநகரின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. டவுன் மேட்டு தெரு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டிருந்தது. இதில் சைக்கிளில் சென்ற ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்