முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.. - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
x
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா 2-வது அலை அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆணையை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.அதில், கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாயும்,பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றாத சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.நாள் தோறும் விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்க 10 லட்சம் ரூபாய் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் முகக்கவசம் அணிவது,  சமூக இடைவேளியை கடைபிடிப்பது கட்டாயம்.கடைகள், வணிக வளாகம், அலுவலகங்களில்  நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களில் பணியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 



Next Story

மேலும் செய்திகள்