சுமூகமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு - இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சுமூகமான நடைபெற்று முடிவுற்றது.
x
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சுமூகமான நடைபெற்று முடிவுற்றது. தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள், விபேட், உள்ளிட்ட அனைத்தையும் இணைத்து சீல் வைத்தனர். இறுதியாக, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், லாரி மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இறுதியாக, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், அந்தந்த வாக்குசாவடி முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. பின்னர், அனைத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. ஆயிரத்து 371 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அனைத்து மின்னணு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில், சீல் வைக்கப்பட்டது. பின்னர், அனைத்தும், வாக்குகள் எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு, சிசிடிவி கேமிராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்கு இயந்திரங்கள், பாதுகாப்பாக, தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. அம்மாவட்டத்தின், 2 ஆயிரத்து 97 வாக்குசாவடிகளில் 69.84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பின்பு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு, தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்