'கர்ணன்' படத்திற்கு தடை கோரி வழக்கு - தனுஷ்-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

கர்ணன் படத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
x
தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது கர்ணன் திரைப்படம். இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள "பண்டாரத்தி புராணம்" என்ற பாடல், குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் தணிக்கைத்துறை மண்டல அலுவலர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்