தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு
x
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல, தி.மு.க.  கூட்டணிக்கு, தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமப்புற அனைத்து சமுதாய அனைத்து கோயில் பூசாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பி.மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, தங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்