"நாளை ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு" - சமக-ஐ.ஜே.கே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியாகும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாளை ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு - சமக-ஐ.ஜே.கே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
x
மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியாகும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்ய கட்சியுடன், சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் ஐ.ஜே.க கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர். இருகட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த இரு கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மற்றும் ஐஜேக தலைவர் ரவிபச்சமுத்து உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். பின்னர் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் நாளை வெளியிடப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்